Tuesday, May 6, 2014

காலிஃப்ளவர் முட்டை டிப்

பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான காலிஃப்ளவரை வைத்து வறுவல், பஜ்ஜி, மஞ்சூரியன் போன்றவற்றை செய்திருப்போம். அதனை முட்டையுடன் சேர்த்து செய்திருக்கமாட்டோம். ஆனால் இப்போது காலிஃப்ளவரை, முட்டை மற்றும் சில மசாலாப் பொருட்களில் நனைத்து, எண்ணெயில் பொரித்து ஒரு வித்தியாசமான சுவையில் ஒரு ஸ்நாக்ஸை செய்யலாம். அதற்கு காலிஃப்ளவர் முட்டை டிப் என்று பெயர். இது மாலை வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

 
தேவையான பொருட்கள்: 
காலிஃப்ளவர் - 1 கப் 
முட்டை - 3 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் 
சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
முதலில் காலிஃப்ளவரை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை முட்டைக் கலவையில் நனைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான காலிஃப்ளவர் முட்டை டிப் ரெடி!!!
 

பச்சை பட்டாணி நிமோனா

வட இந்தியாவில் இருப்பவர்கள் தான் பச்சை பட்டாணி நிமோனாவை கேள்விப்பட்டிருக்க முடியும். மற்றபடி வேறு எவருக்கும் இதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ரெசிபி உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. பொதுவாக இதுவும் குழம்பு போன்றது தான். சாதத்துடன் சாப்பிட ஏற்ற ஒரு வித்தியாசமான குழம்பு தான் பட்டாணி நிமோனா. இந்த மாதிரியான வித்தியாசமான ரெசிபியை ஏதேனும் விழாக்களின் போது செய்தால், விழாவே ஒரு வித்தியாசமாக இருக்கும். அதிலும் அன்னையர் தினம் வரப் போகிறது. இத்தினத்தன்று அன்பான அம்மாவை அமர வைத்து, அவர்களுக்கு இந்த பச்சை பட்டாணி நிமோனாவை செய்து கொடுத்தால், நன்றாக இருக்கும். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்: 
பச்சை பட்டாணி - 3 கப் 
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
இஞ்சி - 1 இன்ச் 
பூண்டு - 4 பல் 
பச்சை மிளகாய் - 2-3 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
 மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
 
 
தாளிப்பதற்கு... 
சீரகம் - 1 டீஸ்பூன் 
மிளகு - 3-4 
பிரியாணி இலை - 2 
வரமிளகாய் - 2 
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது) 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
 
 செய்முறை: 
 முதலில் பச்சைப் பட்டாணியை ஓரளவாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்குகளை 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்கி, ஒரு தட்டில் தனியாக போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்த அனைத்துப் பொருட்களையும் போட்டு, 2-3 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து, 3 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து, 2 நிமிடம் கிளறி விட வேண்டும். இறுதியில் அரைத்து வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 3 நிமிடம் கொதிக்க விட்டு, வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 10 நிமிடம் ஆனதும், மூடியைத் திறந்து, கரம் மசாலா தூவி கிளறி விட்டு, இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பச்சை பட்டாணி நிமோனா ரெடி!!! இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சிறந்ததாக இருக்கும்.


சைவ சமையல்

மீல் மேக்கர் மசாலா

பொதுவாக மீல் மேக்கரை பிரியாணியில் சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த மீல் மேக்கரை மதிய வேளையில் சாதத்திற்கு, மசாலாவாக செய்து கூட சாப்பிடலாம். ஆம், இது சற்று வித்தியாசமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி. மேலும் அனைவருக்கும் பிடித்ததாகவும் இருக்கும். ஆகவே இன்று மதியம் ஏதாவது ஒரு வித்தியாசமான ரெசிபி செய்ய நினைப்போருக்கு இது சரியானதாக இருக்கும். அந்த மீல் மேக்கர் மசாலாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து, சுவை எப்படி இருந்தென்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்: 
மீல் மேக்கர் - 250 கிராம் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
 மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
தேங்காய் பால் - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
தண்ணீர் - 1 1/2 கப் (வெதுவெதுப்பானது) 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
 
செய்முறை: முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இப்போது மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். மசாலாவானது நன்கு கொதித்ததும், தீயை அணைத்துவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், அருமையான மீல் மேக்கர் மசாலா ரெடி!!!


காஷ்மீரி காராமணி மசாலா

 
காஷ்மீரி காராமணி மசாலா மிகவும் சுவையுடன் இருக்கக்கூடிய ஒரு மசாலா. பொதுவாக காராமணியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வெள்ளை காராமணி மற்றொன்று சிவப்பு காராமணி. இப்போது இந்த மசாலாவில் பயன்படுத்தியிருப்பது சிவப்பு காராமணி. பெரும்பாலும் காஷ்மீரி உணவுகள் காரத்தில் மிகவும் குறைவாக இருக்கும். ஏனெனில் காரம் அதிகம் இருந்தால், சுவை குறைந்துவிடும் என்பதாலேயே. மேலும் இதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல், சற்று வித்தியாசமான முறையில் மசாலா செய்யப் போகிறோம். சரி, இப்போது அந்த காஷ்மீரி காராமணி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் 
காஷ்மீரி காராமணி - 2 கப் (இரவு முழுவதும் ஊற வைத்தது) 
பிரியாணி இலை - 1 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
தக்காளி - 3 (நறுக்கியது) 
இஞ்சி - 1 இன்ச் (துருவியது) 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை: 
முதலில் ஊற வைத்துள்ள காராமணியை கழுவி, குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்னர் விசில் போனதும், தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் துருவிய இஞ்சி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின் வேக வைத்துள்ள காராமணியைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி விட்டு, இறுதியில் கரம் மசாலா சேர்த்து கிளறி, மீண்டும் 5-8 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான காஷ்மீரி காராமணி மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, பின் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
 
பச்சை மாங்காய் சாலட்
 
கோடைகாலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பார்த்ததும் வாயில் எச்சில் ஊற வைக்கும் மாங்காய் சீசனும் ஆரம்பித்துவிட்டது. மாங்காய்க்கு என்றே தனிப் பிரியர்கள் உள்ளனர். அவர்கள் மாங்காய் எவ்வளவு புளிப்புடன் இருந்தாலும், அந்த புளிப்பை பொருட்படுத்தாமல் சாப்பிடுவார்கள். அத்தகையவர்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ் சொல்லவா? மாங்காயை பச்சையாக கடித்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை சாலட் போன்று, செய்து மாலை வேளையில் சாப்பிட்டால், சிறந்ததாக இருக்கும். இப்போது அந்த மாங்காயை எப்படி சாலட் செய்வதென்று பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்: 
 
பச்சை மாங்காய் - 1 
பச்சை மிளகாய் - 1 
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) 
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் 
வெங்காயம் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 
சிட்டிகை உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
முதலில் மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த நறுக்கிய மாங்காயை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். பின்பு அதில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, இறுதியில் மேலே உப்பு தூவி பரிமாற வேண்டும். இப்போது சுவையான பச்சை மாங்காய் சாலட் ரெடி!!!


 
 

Wednesday, March 19, 2014

ரத்த குழாய் அடைப்பு நீங்க


நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை
செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்
உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்
ஆச்சரியம்.

தயவு செய்து கவனியுங்கள்.

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச்
செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு
பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள்
இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு
பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்
ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து
வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து
சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60
நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு
இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே
உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள்
நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !!! 
நன்றி.....


Sunday, June 16, 2013

Bamini Tamil Font

Download: Bamini Tamil Font Bamini.ttf [Right click on the link and use "Save as"]

How to install fonts in Windows?

Copy and Paste the downloaded Bamini.ttf into the location Start -> Settings -> Control Panel -> Fonts

Bamini Tamil Keyboard Mapping / Layout:





Monday, April 29, 2013

ஆரோக்கிய சமையல்

கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா

மட்டன் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய அசைவ உணவுகளில் ஒன்று. இது மிகவும் சுவையானதும் கூட. மட்டனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதிலும் மட்டன் குருமா, மட்டன் சுக்கா, மட்டன் குழம்பு என்று பல. இவை அனைத்துமே மிகவும் சுவையானது. இத்தகைய மட்டனை பல ஸ்டைலில் சமைக்கலாம். அதில் எப்போதும் செட்டிநாடு தான் பிரபலமானது. இப்போது அவற்றில் ஒரு ஸ்டைலான கேரளா ஸ்டைலில் மட்டன் குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து செய்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்: 
 
மட்டன் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது) 
பூண்டு - 5 பல் (நறுக்கியது) 
தேங்காய் பால் - 1/2 கப்
 பட்டை - 1 
ஏலக்காய் - 3 
கிராம்பு - 3 
சோம்பு - 1 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
 மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் 
முந்திரி - 11 (நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்தது) 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
வினிகர் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும். பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மட்டனை நன்கு கழுவி, அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், தேங்காய் பால், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் குக்கரில் உள்ள மட்டனை நீருடன் வாணலியில் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அத்துடன் வினிகர், முந்திரி பேஸ்ட் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் குருமா ரெடி!!! இந்த குருமா சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.


புதினா இறால் குழம்பு

தினமும் சைவ உணவுகளை சாப்பிட்டு போர் அடித்தவர்கள், அவ்வப்போது அசைவ உணவுகளையும் சமைத்து சாப்பிட வேண்டும். அதிலும் இறைச்சிக்கு பதிலாக கடல் உணவுகளில் ஒன்றான இறாலை சமைத்து சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இது கோடைகாலம் என்பதால், உடலுக்கு புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தரும் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. எனவே இவைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, ஒரு புதுவிதமான ரெசிபியான புதினா இறால் குழம்பை செய்யலாம். இவை மிகவும் சுவையுடன் இருப்பதோடு, விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது அந்த புதினா இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!
 
தேவையான பொருட்கள்: 
 
 இறால் - 200 கிராம் 
புதினா - 1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது) 
கொத்தமல்லி - 1/2 கட்டு (சுத்தம் செய்தது) 
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
பூண்டு - 5 பற்கள் 
பச்சை மிளகாய் - 1-2 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் 
தேங்காய் பால் - 100 மி.லி 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
தண்ணீர் - 1 1/2 கப் 
 
செய்முறை: 
 
 இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான புதினா இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
 
நீலகிரி சிக்கன் குருமா
 
எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அவ்வாறு ஒரே மாதிரியை செய்து சாப்பிடுவதை விட்டு, தமிழ்நாட்டில் உள்ள வித்தியாசமான சில ஸ்டைல்களிலும் சிக்கனை செய்து சாப்பிடலாம். அவற்றில் ஒன்று தான் நீலகிரி ஸ்டைல். இதுமிகவும் குளிர்ச்சியான மலைப் பிரதேசம் என்பதால், இங்கு சற்று காரமாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். சரி இப்போது அங்கு செய்யப்படும் சிக்கன் குருமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!! 
 
தேவையான பொருட்கள்: 
 
சிக்கன் - 1 கிலோ 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
தக்காளி - 1 (நறுக்கியது) 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

அரைப்பதற்கு... 
 சீரகம் - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
ஏலக்காய் - 2 
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன் 
முந்திரி - 8 
பச்சை மிளகாய் - 4 
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
தண்ணீர் - 3 1/2 கப் 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துஇ 4-5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 7-8 நிமிடம் கிளறி விட வேண்டும். பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20-30 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும் இப்போது சுவையாக நீலகிரி சிக்கன் குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
 

சூரை மீன் கிரேவி
 
மீன்களில் சால்மன் மற்றும் டூனா என்னும் சூரை மீன் மிகவும் ஆரோக்கியமானவை. இத்தகைய மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, மிகுந்த சுவையும் உள்ளது. மேலும் இந்த மீன்களுள் சூரை மீனில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இது கண்களுக்கும், மார்பக புற்றுநோயை தடுப்பது மற்றும் பலவற்றிற்கும் பெரும் உதவியாக இருக்கும். இத்தகைய சூரை மீனை வைத்து கிரேவி செய்து வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு வலுவோடும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். இப்போது இந்த சூரை மீனை வைத்து எப்படி கிரேவி செய்வதென்று பார்ப்போமா!
 
தேவையான பொருட்கள்: 
 சூரை மீன் - 2 டின் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
பூண்டு - 4-5 பல் (நறுக்கியது) 
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
தந்தூரி மசாலா - 1/2 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
 
சூரை மீன்களை நன்கு சுத்தம் செய்து, நீரில் கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பிறகு உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், தந்தூரி மசாலா, சீரகப் பொடி சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து நறுக்கிய தக்காளியை போட்டு, 2-3 நிமிடம் தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி விட வேண்டும். பின் அதில் சூரை மீன்களை சேர்த்து ஒரு முறை கிளறி, தட்டு வைத்து 5-6 நிமிடம் மூடி வைத்து, பிறகு திறந்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும். கிரேவியானது நன்கு கொதித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான சூரை மீன் கிரேவி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். 
 
 
 


Tuesday, April 23, 2013

சமையல் குறிப்பு - 2

சோயா பீன்ஸ் கட்லெட் 

சோயா பீன்ஸ் - 1 கப்
உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 2
பச்சைக் கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சம் பழம் - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கறிமசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
ரொட்டித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

* சோயா பீன்சை முதல் நாளிரவே ஊற வைத்து கொள்ளவும்.
* ஊறிய சோயா பீன்சை வேக வைத்து நைசாக மசித்துக் கொள்ளவும்.
* உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் நெய், 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, சோம்புத் தூளைப் போட்டு, பொரியவிட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* இப்போது மசித்த சோயாபீன்ஸ், உருளைக்கிழங்கைப் போட்டுக் கிளறி மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறி மசாலாத் தூள் சேர்க்கவும்.
* அப்படியே உப்பு, எலுமிச்சம் பழம் சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து பிறகு இறக்கி வைக்கவும்.
* சிறு உருண்டைகளாக எடுத்து விரும்பிய வடிவில், அளவில் கட்லெட்டுகள் தயாரிக்கவும்.
* அதை ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து தோசைக்கல்லை சூடாக்கி அதில் இரண்டு இரண்டாகப் போட்டு சுற்றிலும் நெய், எண்ணெய் விட்டு முறுக விட்டு எடுத்து வைக்கவும்.
* வெங்காயம், காரட், பீட்ரூட், வெள்ளரி துண்டுகளால் அலங்கரித்து தக்காளி சாஸூடன் பரிமாறலாம்.

சுவாரசியமான குறிப்பு

* இது என்ன `கட்லெட்' என்பதை நீங்களே சொன்னால்தான் மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியும். `இது என்ன கட்லெட் சொல்லுங்க பார்க்கலாம்?' என்று ஒரு சின்ன `குவிஸ்' கேள்வி கேட்டு விருந்தை சுவாரசியமாக்கி விட்டு பிறகு சோயா கட்லெட்டை பரிமாறலாம்.

* சோயாவின் சிறப்பு பற்றி ஊட்டச்சத்து வல்லுனர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தச் சத்துக்கள் நமக்குள் நிலைகொள்ள இதேபோல் விதவிதமான சோயா உணவு தயாரித்து உண்ணலாமே!  

சமையல் குறிப்பு

சோயா பக்கோடா

சோயா பக்கோடா சரியாக இருக்கும். இதை செய்வது மிகவும் எளிது.  இப்போது இந்த சோயா பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 

தேவையான பொருட்கள்:

சோயா பீன்ஸ் – 100 கிராம்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு–3(வேக வைத் து மசித்தது)
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
கடலைப்பருப்பு – 2 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
எள்ளு – 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  
 முதலில் சோயா பீன்ஸை சுடு தண்ணீரில் 8-10 நிமிடம் ஊற வைக்வும். இதனால் அவை சற்று மென் மையாகிவிடும். கடலைப்பருப்பை ஒரு அரைமணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் கழுவிய கட லைப்பருப்பை போட்டு, அத்துடன் ஓமம், மிளகாய் தூள், உப்பு, எள்ளு , பேக்கிங் சோடா, மல்லித் தூள் சேர்த்து நன்கு ஒரு முறை அரைத் துக் கொள்ளவும்.
 
பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அதோடு சோயா பீன்ஸ், வெங் காயம், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது தண் ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக நன்கு பிசைந்து கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்திருக் கும் கலவையை சிறு உருண்டைக ளாக உருட்டி, எண்ணெயில் போட் டு பொன்னிறமாக பொரித்து எடு க்கவும். இதேப்போல் அனைத்து கலவையையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான மொறுமொறு சோயா பக்கோடா ரெடி!!! இத னை தக்காளி சாஸ் அல்லது ஏதேனும் சட்னியுடன் தொட்டு சாப்பிட் டால் அருமையாக இருக்கும்.

சிக்கன் 65

விரிவுரை: 

அனைவருக்கும் பிடித்த ஆல் டைம் ஃபேவரிட் டிஷ் இது !

தேவையான பொருட்கள்: 

கைசிக்கன் – கால் கிலோ
மஞ்சள் துள் – 1 சிட்டி
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
சிக்கன் பவுடர் – 3 டேபிள்ஸ்பூன்
கார்ன் மாவு – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
சிக்கனை நன்கு சுத்தம் செய்யவும்.
சிக்கனை நன்கு சுத்தம் செய்யவும்.
எண்ணெய் தவிர மேலே கொடுத்தவற்றை ஓவ்வொன்றாக சிக்கனுடன் சேர்த்து பிரட்டவும்
எண்ணெய் தவிர மேலே கொடுத்தவற்றை ஓவ்வொன்றாக சிக்கனுடன் சேர்த்து பிரட்டவும்
மசால் கலந்த சிக்கனை அரை மணி நேரம் ஊற விடனும்
மசால் கலந்த சிக்கனை அரை மணி நேரம் ஊற விடனும்
கடாயில் வறுக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
கடாயில் வறுக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
சிக்கன் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
சிக்கன் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
டேஸ்டி சிக்கன் 65 ரெடி !!!
டேஸ்டி சிக்கன் 65 ரெடி !!!

செய்முறை: 

• சிக்கனை நன்கு சுத்தம் செய்யவும்.
• எண்ணெய் தவிர மேலே கொடுத்தவற்றை ஓவ்வொன்றாக சிக்கனுடன் சேர்த்து பிரட்டவும்.
• மசால் கலந்த சிக்கனை அரை மணி நேரம் ஊற விடனும்.
• கடாயில் வறுக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
• சிக்கன் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
• டேஸ்டி சிக்கன் 65 ரெடி !!!


அவரை முட்டை பொரியல்

விரிவுரை: 

அவரை-முட்டை பொரியல் வித்தியாசமான சுவை உடையது. காய் பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையான பொருட்கள்: 

அவரைக்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 6
முட்டை – 2
உப்பு – தேவைக்கு
அவரை முட்டை பொரியல்
அவரை முட்டை பொரியல்

தாளிக்க: 

கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வரமிளகாய் – 3
எண்ணெய் – தேவைக்கு

செய்முறை: 

• அவரைக்காயை சுத்தமான நீரில் அலசி பொடியாக நறுக்கவும்.
• வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
• வாணலியில் தாளிக்க கொடுத்தவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி ஓவ்வொன்றாக தாளிக்கவும்.
• நறுக்கிய அவரைக்காயை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
• பின் கால் கப் நீர் விட்டு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
• காய் வெந்தவுடன், 2 முட்டையை உடைத்து ஊற்றி அடி பிடிக்காமல் நன்றாக கிளறவும். வேண்டுமானால் கொஞ்சம் எண்ணெய் உற்றிக் கொள்ளலாம்.
• சுவை மிகுந்த அவரை-முட்டை பொரியல் தயார்.


கோபி 65

விரிவுரை: 

கோபி 65 அனைத்து சாத வகைகளுக்கும் பொருந்தும். ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்: 

காலிப்பிளவர் – 1 (சிறியது)
சிக்கன் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
கார்ன் மாவு – 1 டீஸ்பூன்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
கடலை மாவு - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு செய்முறை:
கோபி 65
கோபி 65

செய்முறை: 

• முதலில் காலிப்பிளவரை சிறு சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும்.
• பின் அதனை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்த நீரில் 10 நிமிடங்கள் போடவும்.
• ஒரு பாத்திரத்தில் காலிப்பிளவர் பூக்களை போட்டு, அதனுடன் 65 பவுடர், கார்ன் மாவு, அரிசி மாவு, கடலை மாவு மற்றும் தேவையான உப்பு சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
• கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி, காலிப்பிளவரை போட்டு சிவந்ததும் எடுக்க வேண்டும்.
• கிரிஸ்பியான கோபி 65 ரெடி.

 

Wednesday, March 20, 2013

அறுசுவை உணவு

வாழைப்பழ போண்டா


பொதுவாக மாலை வேளை வந்தாலே, ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பஜ்ஜி, வடை, போண்டா என்று டீ அல்லது காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், அலாதியான சந்தோஷம் கிடைக்கும். அத்தகைய வகையில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, இனிப்பான மற்றும் சத்தான வாழைப்பழத்தை வைத்து போண்டா செய்து கொடுக்கலாம். சரி, இப்போது அந்த வாழைப்பழ போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: வாழைப்பழம் - 2 மைதா மாவு - 1 1/2 கப் சர்க்கரை - 1/4 கப் தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் அந்த மசித்த வாழைப்பழம், மைதா மாவு, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, சற்று கெட்டியாக போண்டா மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பிறகு கலந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது இனிப்பான வாழைப்பழ போண்டா ரெடி!!!

ஜவ்வரிசி கட்லெட்

பெரும்பாலும் கட்லெட்டானது காலை உணவாகவோ அல்லது மாலை உணவாகவோ சாப்பிடக் கூடியது. அதிலும் கட்லெட்டில் பல வகைகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு வகையான ஜவ்வரிசி கட்லெட்டை எப்படி செய்வதென்று தெரியுமா? இந்த கட்லெட் செய்வது மிகவும் ஈஸியானது. அதிலும் இந்த கட்லெட்டிற்கு முக்கியமான பொருள் ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு தான். ஆகவே ஜவ்வரிசி கட்லெட் செய்யத் தெரியவில்லை என்று நினைப்பவர்களுக்கு ஒரு எளிமையான முறையில், படிப்படியாக எப்படி செய்வதென்று தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் விடுமுறை நாட்களில் செய்து சாப்பிடலாம். சரி, ஜவ்வரிசி கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

இரவில் படுக்கும் போதே 250 கிராம் ஜவ்வரிசியை 3/4 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அதனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

3-4 உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 2-3 விசில் விட்டு வேக வைத்து, தோலுரித்து குளிர வைக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு குளிர்ந்ததும், அதனை மசித்தோ அவ்வது துருவியோ வைத்துக் கொள்ள வேண்டும்.

மசித்த உருளைக்கிழங்கை ஊற வைத்த ஜவ்வரிசியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

கொத்தமல்லியின் இலைகளை பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ள வேண்டும்.சுவைக்கேற்ப பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இதில் 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை, ஜவ்வரிசி மற்றும் உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையில் உப்பு, கரம் மசாலா தூள், மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து கலந்து வைத்துள்ள கலவையில், ஒரு எலுமிச்சை அளவை எடுத்து, சற்று தட்டையாக தட்டி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், தட்டி வைத்துள்ளவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதோ சுவையான ஜவ்வரிசி கட்லெட் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


Wednesday, November 28, 2012

அறுசுவை உணவு

தேங்காய் பால் புலாவ்

சாதாரணமாக புலாவ் செய்வது மிகவும் எளிது. அதிலும் இது காலை வேளையில் பள்ளிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செய்து எடுத்துச் செல்ல ஈஸியான ஒரு ரெசிபி. அத்தகைய புலாவ் ரெசிபியில், நாம் தேங்காய் பால் புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
சிவப்பு வெங்காயம் - 1 (நறுக்கியது)
குங்குமப் பூ - 1 பெரிய சிட்டிகை
தேங்காய் பால் - 1 1/2 கப்
பால் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:

முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சற்று அதிக அளவு எண்ணெய் ஊற்றி காயந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை மட்டும் சேர்த்து நன்கு மொறுமொறுவென்று பொரித்து எடுக்க வேண்டும்.

பிறகு அந்த வெங்காயத்தை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு, வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் மட்டும் இருக்குமாறு வைத்து, மீதமுள்ள எண்ணெயை எடுத்துவிடவும்.

பின்னர் அந்த எண்ணெயில் கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு கழுவி வைத்துள்ள அரிசியை அத்துடன் சேர்த்து, லேசாக வறுக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு டீஸ்பூன் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அந்த பாலை குங்குமப்பூவில் சேர்த்து, குங்குமப்பூவை நன்கு கரையும் வரை ஊற வைக்க வேண்டும்.

இப்போது தேங்காய் பால், பால் மற்றும் குங்குமப்பூ பாலை அரிசியுடன் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தீயை குறைவில் வைத்து, பாலில் அரிசி வெந்து, நீர் சுண்டும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். அரிசியானது வெந்ததும், அதில் பொரித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான தேங்காய் புலாவ் ரெடி!!!

காராமணி மசாலா

 பீன்ஸ் வகையில் ஒன்றான காராமணியில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆகவே இவற்றை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் இதனை மசாலா செய்து சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர். சரி, அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
காராமணி - 1 கப்
வரமிளகாய் - 12
தேங்காய் துருவல் - 1/2 கப்
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் காராமணியை அரைமணிநேரம் நீரில் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, காராமணியை கழுவி போட்டு, 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைக்கவும். பிறகு ஒருவாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வரமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த மிளகாயை, தேங்காய், பூண்டு, புளி, சிறிது வேக வைத்துள்ள காராமணி ஆகியவற்றோடு அரைக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, அதில் தக்காளியை போட்டு, தக்காளியின் தோலை உரித்து, அதனையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள காராமணி, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தக்காளியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, குழம்பு நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பின்பு ஒரு சிறு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்ற வேண்டும். இப்போது சுவையான காராமணி மசாலா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

சேமியா பொங்கல்

சனிக்கிழமை அன்று அனைவருக்கும் பொதுவாக விடுமுறையாக இருக்கும். அப்போது சற்று வித்தியாசமான முறையில் ஏதேனும் ஒரு ரெசிபியை ட்ரை செய்து சாப்பிட்டால், நன்றாக இருக்கும் அல்லவா? அப்படியெனில் அதற்கு சேமியா பொங்கல் சரியாக இருக்கும். அந்த சேமியா பொங்கலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சேமியா - 2 கப்
பயத்தம் பருப்பு - 2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறிது (துருவியது)
முந்திரிப் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பயத்தம் பருப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, பருப்பை முக்கால் பதம் வரை வேக வைக்கவும்.

பிறகு அதோடு வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, இரண்டையும் நன்கு குழைய வேக வைக்கவும்.

பின் அத்துடன் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.அதே நேரத்தில் மற்றொரு பக்கம் மற்றொரு வாணலியை வைத்து நெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அந்த சேமியாவில் போட்டு, ஒரு முறை கிளறி இறக்க வேண்டும்.

இப்போது அருமையான சேமியா பொங்கல் ரெடி!!! இதனை தேங்காய சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 



Thursday, October 18, 2012

உலக செய்திகள்


36 கி.மீ. உயரத்திலிருந்து குதித்து ஒலியை விட வேகமாக பறந்த மனிதர்!



ரோஸ்வெல்: வானில் 36 கி.மீ. உயரத்தில் இருந்து தரையில் குதித்து, ஒலியை விட வேகமாக பயணித்து, தரையை பத்திரமாக வந்து அடைந்துள்ளார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெலிக்ஸ் பவும்கார்ட்னர் (வயது 43) என்ற ஸ்கை டைவர்.

நவராத்திரி ரெசிபி


கோதுமை அல்வா

நவராத்திரி என்றாலே அது ஒன்பது நாட்கள் நடக்கக்கூடிய ஒரு பண்டிகை. இந்த பண்டிகையின் போது ஒன்பது நாட்களும், ஒன்பது விதமான இனிப்புகளை செய்து, கடவுளுக்கு படைத்து வருவார்கள். அத்தகைய இனிப்புகளில் எளிதாக செய்யக்கூடிய வகையில் கோதுமை அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
பாதாம் - 7
உலர் திராட்சை - 5
நெய் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், அத்துடன் கோதுமை மாவை போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பின் அதில் மெதுவாக தண்ணீரை விட்டு கிளற வேண்டும். (முக்கியமாக கிளறும் போது மாவு கெட்டி கெட்டியாக சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.)
கிளறும் போது, தண்ணீரை மாவு உறிஞ்சும் வரை, தொடர்ந்து 2-3 நிமிடம் கிளற வேண்டும். தண்ணீர் ஓரளவு வற்றியதும், அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை உருகும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்
மாவானது அல்வா பதத்திற்கு வரும் போது, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின் அதன் மேல் ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை போட்டு அலங்கரிக்கவும்.
இப்போது சுவையான கோதுமை அல்வா ரெடி!!!
குறிப்பு: பால் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இதில் தண்ணீருக்கு பதிலாக பாலை சேர்த்து செய்யலாம். அவ்வாறு பாலை சேர்க்கும் போது, நன்கு காய்ச்சிய பாலை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பால் வாசனை அல்வாவின் சுவையையே மாற்றிவிடும்.



சுவையான... பிரட் ஜாமூன்


பிரட்டை வைத்து குலாப் ஜாமூன் போல் செய்து கொடுக்கலாம். இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 3
பால் - சிறிது
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட் துண்டுகளை உதிர்த்து, அதை பாலால் சற்று பிசைந்து கொண்டு உருட்டிக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட் வைத்துள்ள பிரட் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி சர்க்கரையை போட்டு, பாகு போன்று காய்ச்சி, ஏலக்காய் சேர்த்து இறக்கிக் கொள்ளவும்.
பிறகு அந்த பாகுவில் பொரித்து வைத்துள்ள, பிரட் உருண்டைகளை சேர்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் பரிமாறவும்.
இப்போது சுவையான பிரட் ஜாமூன் ரெடி!!!
குறிப்பு: வேண்டுமென்றால் பிரட் துண்டுகளை வேண்டிய வடிவத்தில் வெட்டி, எண்ணெயில் பொரித்து, சர்க்கரை பாகுவில் போடலாம்.

கடலைப் பருப்பு ஸ்வீட்


ஸ்வீட் என்றால் பிடிக்காதவர்களே இல்லை. அதிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் பருப்பை வைத்து செய்யும் ஸ்வீட்டின் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்காது. இப்போது அந்த பருப்பு வகையில் கடலைப்பருப்பை வைத்து எப்படி ஸ்வீட் செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 3 கப்
சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்
மைதா மாவு - 1 கப்
சோடா உப்பு - 1 சிட்டிகை
தேங்காய் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி பொடி - சிறிது
பாதாம் பொடி - சிறிது
உலர்ந்த திராட்சை - சிறிது
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை கால் மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதனை குக்கரில் வேக வைத்து, அதில் உள்ள நீரை வடித்து, நன்கு மசித்துக் கொள்ளவும். பின் மிக்ஸியில் அரை கப் சர்க்கரையை போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோவா, ஏலக்காய் தூள் போட்டு, கைகளில் நெய் மற்றும் சோடா உப்பை தடவிக் கொண்டு, இவற்றை நன்கு வடை போன்று தட்டிக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ளவற்றை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவுத் தண்ணீரை ஊற்றி, 2 1/2 கப் சர்க்கரையை போட்டு, கம்பிப் பதம் வரும் வரை நன்கு காய்ச்சி, அதில் பொரித்தவற்றை போட்டு எடுத்து, சர்க்கரைப் பொடி, முந்திரி பொடி, பாதாம் பொடி மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றில் போட்டு பிரட்டி எடுத்து, தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பின் அதன் மேல் உலர்ந்த திராட்சையை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
இப்போது சுவையான கடலைப் பருப்பு ஸ்வீட் ரெடி!!!

கோதுமை அப்பம்!

 கோதுமை அப்பத்தை வீட்டில் ஈஸியாக எப்படி செய்வதென்று பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
தேங்காய் பவுடர் - 3 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் பவுடர், ஏலக்காய் தூள், சோடா பவுடர் மற்றும் தண்ணீர் ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான நெய்யை ஊற்றி, காய்ந்ததும், அதில் இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போட்டு, பொரிக்க வேண்டும்.
இப்போது கணபதிக்குப் பிடித்த கோதுமை அப்பம் ரெடி...

பூர்ண கொழுக்கட்டை


தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப் (வறுத்தது)
எள் - 2 கப்
வேர்க்கடலை - 2 கப்
பொட்டுக்கடலை - 2 கப்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மண்டை வெல்லம் - 100 கிராம்
உப்பு - சிறிது
செய்முறை:
பூர்ணம் செய்ய...
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும். மண்டை வெல்லத்தை நன்கு நைஸாக இடித்து, அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் மண்டை வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
கொழுக்கட்டை செய்ய...
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, சிறிது லேசான அளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப்போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும்.
இப்போது பூர்ண கொழுக்கட்டை ரெடி!!!

உடல் உறுப்பு தானம்


உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!

'உடல் உறுப்பு தானம்' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.
"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?"
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?
ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.
இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?
இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).
யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?
நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.
உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?
18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.
உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?
ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன. 1954-ம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-
1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.
2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.
 தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?
பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடிஸ்தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் 'ப்ளாஸ்மா பெரிஸிஸ்' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்­ரலையும் எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப்படுவதில்லை.
உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?
பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்குள் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.
வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?
கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது னரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், னரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.
ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?
ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன. மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.
உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?
உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள். கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது. அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த நீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகள் விறைத்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கலவைகள் உள்ளன. அவை 'வயாஸ்பான் திரவம்', 'யுரோ கால்லின்ஸ்" திரவம், 'கஸ்டோயியல்' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.
முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
நம்மிடையே உள்ள ஆதாரங்களின்படி 1902-ம் வருடம் முதன் முதலாக 'அலெக்ஸில்' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.
1905-ம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.
1918-ம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
1954-ம் ஆண்டுதான், அமெரிக்காவின் 'பாஸ்டன்' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
1954-ம் ஆண்டு பீட்டர் பென்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.
1960-ம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
196-ம் ஆண்டு 'கொலராடோ'விலுள்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1965-ம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.
1967-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் 'கேப்டவுன்' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 'டென்னிஸ் டார்வெல்' என்பவரின் இதயத்தை 'லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி' என்பவருக்கு பொருத்தினார்.
1968-ம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
1981-ல் முதன் முறையாக ஒரேநேரத்தில் இதய, நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை அமெரிக்காவின் ஸ்டான்போர்டில் நடைபெற்றது.
1983-ம் ஆண்டு 'சர். மாக்டியா கூப்' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.
1986-ம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1994-ம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உள்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.
2001-ம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
2005-ம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம் / நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கள் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொ,துவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.
சீராட்டி பாராட்டி வளர்த்த நம் உடல், இறந்தபின் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாகி போக வேண்டுமா?
மாறாக, பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழலாம். ஆகவே, இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம்.

Sunday, October 14, 2012

அசைவம் உணவுகள் !

முட்டை பொரியல்


முட்டை உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அதில் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. அந்த முட்டையை இதுவரை குழந்தைகளுக்கு வேக வைத்து தான் கொடுத்திருப்போம். ஆனால் இப்போது அந்த முட்டையை பொரியல் போன்று செய்து கொடுத்தால், அதை அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அத்தகைய முட்டை பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போமா

தேவையான பொருட்கள்:
முட்டை - 8
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதில் சிறிது உப்பை போட்டு, நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் சோம்பை போடவும். சோம்பு வெடிந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அதோடு கறிவேப்பிலை, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் போட்டு. 1-2 நிமிடம் வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து, 1-2 நிமிடம் கிளறவும்.
பின்பு அடித்து வைத்துள்ள முட்டையை அத்துடன் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி வேக விடவும். முட்டை வெந்ததும் அதில் கொத்தமல்லியை போட்டு, கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான முட்டை பொரியல் ரெடி!!!



முட்டை ஸ்பாஞ்ச் ரெசிபி

விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, உடலுக்கு சத்தை வழங்கும் வகையில் ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்து அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் அதற்கு முட்டை ஸ்பாஞ்ச் தான் சரியானது. அதிலும் இதுவரை முட்டையை அப்படியே வேக வைத்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இந்த ரெசிபியில் அந்த முட்டையில் சில பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்து சாப்பிடுவோம். மேலும் இந்த ரெசிபி டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாக இருக்கும். இப்போது இந்த முட்டை ஸ்பாஞ்ச்சை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
முட்டை - 5
வெங்காயம் - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - பாதி (நறுக்கியது)
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், பேக்கிங் பவுடர் மற்றும் சிறிது உப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் சிறு சிறு பௌல்களை எடுத்துக் கொண்டு அதில் வெண்ணெயை தடவி, முட்டைக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, அந்த பௌல்களை வைத்து, தண்ணீரானது பௌலை விட அதிகமாக இல்வாதவாறு இருக்க வேண்டும்.
பின்னர் குக்கரை முழுவதுமாக மூடி விடாமல், ஓரளவு மூடி வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து, இறக்கி விடவும்.
இப்போது சூப்பரான முட்டை ஸ்பாஞ்ச் ரெடி!!! இதனை பட்டர் பேப்பரைக் கொண்டு பக்கவாட்டில் கவர் செய்து பரிமாறலாம்.
குறிப்பு: இதற்கு குக்கருக்கு பதிலாக, இட்லி பாத்திரத்தையும் பயன்படுத்தலாம்.


ஸ்பைசி மீன் மசாலா

பொதுவாக மீனை குழம்பு, மசாலா, வறுவல் என்று செய்வார்கள். ஆனால் மசாலாவில் இப்போது செய்விருக்கும் மசாலா சற்று வித்தியாசமானது. அதாவது, இதில் மீனை வறுத்து, பின் மசாலா செய்வோம். சரி, அந்த மீன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பொரிப்பதற்கு...
சாலமன் மீன் - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மசாலாவிற்கு...
வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
கிராம்புத் தூள் - /14 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மீனை நன்கு கழுவி சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பின் அதனை கழுவி வைத்துள்ள மீனில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள மீனை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், வெந்தய பொடி, கிராம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், அதில் மசாலாவிற்கு ஏற்ற அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கவிடவும்.
பிறகு பொரித்து வைத்துள்ள மீனை இந்த மசாலாவில் சேர்த்து, ஒரு முறை பிரட்டி, தீயை குறைவில் வைத்து, 3 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
இப்போது அருமையான மீன் மசாலா ரெடி!!! இதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, சாதத்துடன் சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.

இறால் மசாலா


கடல் உணவுகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் இறால் மிகவும் நல்லது. அத்தகைய இறாலை லீவு நாட்களில் வீட்டில் பொறுமையாக சமைத்து, ருசித்து சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்போது அந்த இறால் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:
இறால் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்ச பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸியில் வெங்காயத்தில் பாதியைப் போட்டு, சோம்பு, சீரகம், கசகசா, மிளகு போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, லேசாக கொதிக்க விடவும்.
பின் அதில் ஊற வைத்துள்ள இறாலைப் போட்டு, வேண்டுமென்றால் உப்பை சேர்த்து ஒரு முறை பிரட்டி, இறால் வேகும் வரை அடுப்பில் வைத்து, கொதிக்க விட்டு, மசாலா சற்று கெட்டியானதும் இறக்கவும்.
இப்போது சுவையான இறால் மசாலா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

சிக்கன் குருமா

சிக்கன் குருமா என்பது காரசாரமான இந்திய உணவுகளில் ஒன்று. இதனுடைய ஸ்பெஷல் என்னவென்றால், இந்த டிஷ்ஷில் தயிரை பயன்படுத்துவது தான். மேலும் இந்த டிஸ் மிகவும் காரசாரமாக இருக்கும். இதை காரம் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மட்டுமல்லாமல், அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில், அதன் சுவை இருக்கும். இப்போது அந்த சிக்கன் குருமா எப்படி செய்வதென்று பார்ப்போமா!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 8
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் கரம் மசாலா தூளைப் போட்டு பிரட்டி, சற்று நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளகாயை நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி, பிசைந்து கொண்டு, அதனை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரை மணிநேரமோ அல்லது 10 நிமிடமோ ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காய் போட்டு வதக்கவும். பின் அந்த தேங்காயை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் அதில் பிசைந்து வைத்துள்ள சிக்கன் கலவையை போட்டு நன்கு கலக்கி, தீயை குறைவில் வைத்து, மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
பிறகு அதில் மல்லித்தூள், மிளகு மற்றும் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்த்து கிளறி, ஒரு கப் தண்ணீரை ஊற்றி, மறுபடியும் 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்கவும்.
இறுதியாக தயிரை ஊற்றி, வாணலியை மூடி 5-7 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
இப்போது அருமையான சிக்கன் குருமா தயார்!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

மட்டன் கீமா புலாவ்

ஞாயிற்றுக்கிழமை வந்தாலே ஒரு குஷியா தான் இருக்கும். ஏனெனில் அப்போது தான் வாய்க்கு ருசியாக, நிம்மதியாக சாப்பிட முடியும். ஆகவே அவ்வாறு ருசியாக, காரசாரமாக, கொஞ்சம் பிரியாணி போன்று, மட்டன் கொத்துக்கறியை வைத்து செய்து சாப்பிடலாம். இப்போது அந்த மட்டன் கீமா புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 2 கப்
கொத்துக்கறி - 250 கிராம்
தயிர் - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பட்டை - 3
கிராம்பு - 2
லவங்கம் - 6
ஏலக்காய் - 8
முந்திரி - 1/4 கப்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* முதலில் கொத்துக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் விட்டு, அதில் பட்டை, கிராம்பு, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* அதனுடன் தயிர், இஞ்சி-பூண்டு விழுது, முந்திரி, மிளகுத் தூள், மிளகாய் தூள் சேர்த்து, அதோடு சுத்தம் செய்த கீமாவையும் சேர்த்து வதக்கவும்.
* பின்னர் அதில் வேண்டிய உப்பு சேர்த்து, நன்கு ஒரு 5 நிமிடம் கிளறவும். பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, சிறிது நேரம் கறியை வேக விடவும்.
* பின் மூடியைத் திறந்து, பாசுமதி அரிசியை கழுவி, அதில் சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
* இப்போது சுவையான மட்டன் கீமா புலாவ் ரெடி!!! இதற்கு மட்டன் கிரேவியை சைடு டிஷ்-ஆக தொட்டு சாப்பிடலாம்.