செய்தி துளிகள்


தமிழகம் முழுவதும் அரசு வேலைகளுக்காக 85 லட்சம் பேர் காத்திருப்பு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை தகவல்

தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஏறத்தாழ 85 லட்சம்பேர் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகமும், சென்னை மற்றும் மதுரையில்மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன.


 
      சென்னை மாவட்டத்தில் கூடு தலாக தொழில்நுட்பப்பிரிவு, மாற்றுத் திறனாளிகள் உள்பட 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலு வலகங்கள் இயங்குகின்றன. 
 
 புதுப்பித்து வர வேண்டும் பட்டப் படிப்பு வரையிலான கல்வித்தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்திலும், முதுகலை மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளுக்கான கல்வித் தகுதியை அமைவிடத்துக்கு ஏற்ப சென்னையில் அல்லது மதுரையில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். 
 
பதிவுதாரர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் பதிவினை தவறாமல் புதுப்பித்து வர வேண்டும். அப் போது பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும். பெண்கள் அதிகம் இந்த நிலையில், 31.3.2015 வரையில் மாவட்ட, மாநில மற்றும் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய் துள்ள பதிவுதாரர்களின் எண் ணிக்கை தொடர்பான புள்ளி விவரத்தை மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நேற்று வெளியிட்டது.
 
 அதன்படி, அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் சேர்த்து பதிவுதாரர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 97 ஆயிரத்து 402.இதில் பெண் பதிவுதாரர்கள் மட்டும் 43 லட்சத்து 24 ஆயிரத்து 881 ஆகும். இது ஆண்களைவிட அதிகம். இடைநிலை ஆசிரியர்கள் 81 ஆயிரத்து 777 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 91 ஆயிரத்து 816 பேரும், பொறியியல் பட்டதாரிகள் 2 லட்சம் பேரும் கலை பட்டதாரிகள் 4.26 லட்சம் பேரும், அறிவியல் பட்டதாரிகள் 5.69 லட்சம் பேரும், வணிகவியல் பட்டதாரிகள் 3.22 லட்சம் பேரும் பதிவுசெய்துள்ளதாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.


ஆன் - லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை : சோதனை முறையில் 3 மாவட்டங்களில் அமல்

  பாட புத்தகம் வாங்க வரும் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவது; பணம் செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரச்னை போன்றவற்றை தவிர்க்க, இந்த ஆண்டு முதல், ஆன் - லைன் மூலமான பாட புத்தக விற்பனை திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கிஉள்ளது.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில், பாடப்புத்தகங்கள்

 
          இலவசமாக வழங்கப்படுகின்றன. சமச்சீர் கல்வித் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் சேவை கழகம் சார்பில், பாட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
 
ஒரே நேரத்தில்...
தனியார் பள்ளி ஆசிரியர்கள், பாடநுால் கழக கிடங்குகளுக்கு செல்லும் போது, சில பாட புத்தகங்கள் இருப்பு இல்லை என்ற பதில் கிடைக்கிறது. பல பள்ளிகளின் ஊழியர்கள், ஒரே நேரத்தில் வருவதால், பணம் செலுத்த நீண்டநேரம், வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.
 
எனவே, இந்தக் கல்வியாண்டில், பிளஸ் 1க்கு மட்டும், ஆன் - லைன் மூலம், பாட புத்தக விற்பனை திட்டத்தை, பாடநுால் கழகம் துவக்கிஉள்ளது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் சோதனை முறையில், இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
 
தனியார் பள்ளி நிர்வாகத்தினர், பாடநுால் கழக, 'இன்ட்ரானெட்' தளத்தில், புத்தக இருப்பு நிலையை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப, 'நெட் பேங்கிங்' வசதி மூலம் பணம் செலுத்தி, 'ஆர்டர்' செய்யலாம்.
 
அடுத்த ஆண்டு முதல் பணம் செலுத்திய ரசீதை, பாடநுால் கழக மாவட்ட கிடங்கில் கொடுத்து புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது, பிளஸ் 1க்கு மட்டும், மூன்று மாவட்டங்களில், ஆன் - லைன் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பின், சில்லறை விற்பனையிலும் அமலுக்கு வரும்' என்றனர்.


இணையதள வழியில் ஐ.டி.ஐ. தேர்வுகள்: மத்திய அரசு திட்டம்

  தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) ஆண்டுத் தேர்வுகளை இணையதள வழியில் நடத்த மத்திய அரசின் தொழில் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

 
     மத்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிற்பயிற்சிகள் இயக்குநரகத்தின் தலைவர் டி.மாலிக் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கைவினைஞர் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ளும் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் துறை இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
 
        அகில இந்திய அளவிலான தொழிற்பயிற்சித் தேர்வுகள் இப்போது மத்திய அரசின் என்.சி.வி.டி. நிறுவனத்தின் மேற்பார்வையில் இணையவழி அல்லாத முறையில் நேரடியாக நடத்தப்படுகிறது.

 இந்தத் தேர்வு முறை நடத்த அதிக கால அளவு மேற்கொள்ளப்படுகிறது. இதனால், முடிவுகளை வெளியிட குறைந்தது 50 நாள்களுக்கு மேலாகிறது. இந்தத் தேர்வுகளில் மனிதக் குறுக்கீடுகளால் பிழைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஏற்படும் சிறிய தவறுகளால் கேள்வித்தாள்கள் வெளியாகும் நிலையும் ஏற்படுகின்றன.
 
 இந்தப் பழைய முறையிலான தேர்வு முறையில் ஏற்படும் பிரச்னைகளைக் களைய தொழிற்பயிற்சித் துறையின் ஆண்டுத் தேர்வுகளை ஜனவரி 2016 முதல் இணையதள வழிக் கணிணி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மிக குறுகிய காலத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட இயலும்.
 
 எனவே, இந்த இணையதள வழிக் கணினிகளால் பருவத் தேர்வுகளை ஜனவரி 2016 முதல் நடத்துவதால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை விரிவாக எடுத்துரைத்து அறிக்கைகளை ஜூன் 26-க்குள் புதுதில்லியில் உள்ள தொழிற்பயிற்சிகள் துறை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
 
 இந்த அறிக்கையில் இணையதள வழித் தேர்வு எழுதத் தகுதியானவர்களாக தங்களது மாநிலத்தில் தொழிற்பயிற்சி மையங்களில் மாணவர்கள் உள்ளனரா எனக் குறிப்பிட வேண்டும்.
 
 இதுதவிர, தங்களது மாநிலத்தில் இணையதள வழித் தேர்வுகள் நடத்த அனுகூலமான சூழ்நிலை உள்ளதா, இருக்கிறது எனில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதா, இணைய தள வழித் தேர்வுகள் நடத்த உள்கட்டமைப்பு வசதிகள் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ளதா அல்லது வேறு ஏதாவது பயிற்சி நிலையங்களில் இணையதளத் தேர்வுகள் நடத்த வசதிகள் உள்ளதா என்பன குறித்த விவரங்களுடன் விரிவான அறிக்கையை அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment