பாகற்காய் புளிக்குழம்பு
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சத்தான காய்கறியாகும். இதற்கு அதில் உள்ள கசப்புத்தன்மை காரணமாக இருக்கலாம். இருப்பினும் இதனை பொரியல் செய்தால் யாரும் சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் பொரியல் செய்தால் கசப்புத்தன்மை அப்படியே தெரியும். ஆனால் அதனை புளிக்குழம்பு செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படி பாகற்காயை வதக்கி பின் குழம்பு செய்தால், அதன் கசப்புத்தன்மை தெரியாது. சரி இப்போது பாகற்காய் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 1 (வட்டமாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1/4 கப்
தக்காளி - 1 (அரைத்தது)
புளி - 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்ழுன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - 1/2 டீஸ்பூன்
சோம்பு பொடி - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாகற்காய் சேர்த்து நன்கு வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் மசாலா பொடி அனைத்தையும் சேர்த்து வதக்கி, பின் அரைத்த தக்காளியை ஊற்றி நன்கு வதக்க வேண்டும். அடுத்து, அதில் புளிச்சாறு ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட வேண்டும். பின்பு அதில் சர்க்கரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் வதக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், பாகற்காய் புளிக்குழம்பு ரெடி!!!
அச்சு முறுக்கு
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 2 கப்
சர்க்கரை - 1 கப்
முட்டை - 1
எள் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் (பொடித்தது)-2
உப்பு - ஒரு சிட்டிகை
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை :-
மைதாமாவில்,
எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ( முட்டையைத் தனியாக
நன்றாக அடித்துவிட்டு கலக்கணும்)தோசை மாவுப்பதத்தில் கலந்துகொள்ளவும்.
தட்டையான,அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, அச்சு முறுக்குக் கரண்டி முக்கால் பாகம் எண்ணெயில் மூழ்குமாறு சூடாக்கவும்.
கரண்டி நன்கு சூடானதும் அதனை முக்கால் பாகம் மாவில் முக்கியெடுத்து எண்ணையில் அமிழ்த்தவும்.
கரண்டியில் ஒட்டிய மாவு வெந்து தானாகக் கழன்றுவிடும். அதனைத் திருப்பிப்போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
வாழைப்பூ வடை
தேவை:
வாழைப்பூ – 2கப்
கடலைப்பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – அரை கப்
உளுந்தம் பருப்பு – அரை கப்
காயந்த மிளகாய் – 7
பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கு
தேங்காய் – அரை மூடி
எண்ணெய், உப்பு – தேவைக்கு
செய்முறை:
பருப்பு
வகைகளை மிளகாயுடன் ஊறவைத்து உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்,தேங்காய்
சேர்த்து கரகரப்பாக அரைத்து, வாழைப்பூவை கலந்துக் கொள்ளவும். வாணலியில்
எண்ணெய் காய்ந்ததும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
வாழைப்பூ கட்லெட்
தேவை:
நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம்,ரஸ்க்தூள் – 1 கப்
நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன்
எண்ணெய் – 250 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி, உப்பு – சிறிது
செய்முறை:
வாழைப்பூ, வெங்காயத்தை தனித்தனியாக வதக்கி, அதனுடன் ரஸ்க்தூள், நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து, கட்லெட்களாக தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
No comments:
Post a Comment