Tuesday, April 23, 2013

சமையல் குறிப்பு - 2

சோயா பீன்ஸ் கட்லெட் 

சோயா பீன்ஸ் - 1 கப்
உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 2
பச்சைக் கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சம் பழம் - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கறிமசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
ரொட்டித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

* சோயா பீன்சை முதல் நாளிரவே ஊற வைத்து கொள்ளவும்.
* ஊறிய சோயா பீன்சை வேக வைத்து நைசாக மசித்துக் கொள்ளவும்.
* உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் நெய், 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, சோம்புத் தூளைப் போட்டு, பொரியவிட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* இப்போது மசித்த சோயாபீன்ஸ், உருளைக்கிழங்கைப் போட்டுக் கிளறி மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறி மசாலாத் தூள் சேர்க்கவும்.
* அப்படியே உப்பு, எலுமிச்சம் பழம் சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து பிறகு இறக்கி வைக்கவும்.
* சிறு உருண்டைகளாக எடுத்து விரும்பிய வடிவில், அளவில் கட்லெட்டுகள் தயாரிக்கவும்.
* அதை ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து தோசைக்கல்லை சூடாக்கி அதில் இரண்டு இரண்டாகப் போட்டு சுற்றிலும் நெய், எண்ணெய் விட்டு முறுக விட்டு எடுத்து வைக்கவும்.
* வெங்காயம், காரட், பீட்ரூட், வெள்ளரி துண்டுகளால் அலங்கரித்து தக்காளி சாஸூடன் பரிமாறலாம்.

சுவாரசியமான குறிப்பு

* இது என்ன `கட்லெட்' என்பதை நீங்களே சொன்னால்தான் மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியும். `இது என்ன கட்லெட் சொல்லுங்க பார்க்கலாம்?' என்று ஒரு சின்ன `குவிஸ்' கேள்வி கேட்டு விருந்தை சுவாரசியமாக்கி விட்டு பிறகு சோயா கட்லெட்டை பரிமாறலாம்.

* சோயாவின் சிறப்பு பற்றி ஊட்டச்சத்து வல்லுனர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தச் சத்துக்கள் நமக்குள் நிலைகொள்ள இதேபோல் விதவிதமான சோயா உணவு தயாரித்து உண்ணலாமே!  

No comments:

Post a Comment