கோதுமை அல்வா
நவராத்திரி என்றாலே அது ஒன்பது நாட்கள் நடக்கக்கூடிய ஒரு பண்டிகை. இந்த பண்டிகையின் போது ஒன்பது நாட்களும், ஒன்பது விதமான இனிப்புகளை செய்து, கடவுளுக்கு படைத்து வருவார்கள். அத்தகைய இனிப்புகளில் எளிதாக செய்யக்கூடிய வகையில் கோதுமை அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
பாதாம் - 7
உலர் திராட்சை - 5
நெய் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
பாதாம் - 7
உலர் திராட்சை - 5
நெய் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், அத்துடன் கோதுமை மாவை போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பின் அதில் மெதுவாக தண்ணீரை விட்டு கிளற வேண்டும். (முக்கியமாக கிளறும் போது மாவு கெட்டி கெட்டியாக சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.)
கிளறும் போது, தண்ணீரை மாவு உறிஞ்சும் வரை, தொடர்ந்து 2-3 நிமிடம் கிளற வேண்டும். தண்ணீர் ஓரளவு வற்றியதும், அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை உருகும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்
மாவானது அல்வா பதத்திற்கு வரும் போது, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின் அதன் மேல் ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை போட்டு அலங்கரிக்கவும்.
இப்போது சுவையான கோதுமை அல்வா ரெடி!!!
குறிப்பு: பால் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இதில் தண்ணீருக்கு பதிலாக பாலை சேர்த்து செய்யலாம். அவ்வாறு பாலை சேர்க்கும் போது, நன்கு காய்ச்சிய பாலை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பால் வாசனை அல்வாவின் சுவையையே மாற்றிவிடும்.
சுவையான... பிரட் ஜாமூன்
பிரட்டை வைத்து குலாப் ஜாமூன் போல் செய்து கொடுக்கலாம். இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 3
பால் - சிறிது
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
பால் - சிறிது
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட் துண்டுகளை உதிர்த்து, அதை பாலால் சற்று பிசைந்து கொண்டு உருட்டிக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட் வைத்துள்ள பிரட் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி சர்க்கரையை போட்டு, பாகு போன்று காய்ச்சி, ஏலக்காய் சேர்த்து இறக்கிக் கொள்ளவும்.
பிறகு அந்த பாகுவில் பொரித்து வைத்துள்ள, பிரட் உருண்டைகளை சேர்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் பரிமாறவும்.
இப்போது சுவையான பிரட் ஜாமூன் ரெடி!!!
குறிப்பு: வேண்டுமென்றால் பிரட் துண்டுகளை வேண்டிய வடிவத்தில் வெட்டி, எண்ணெயில் பொரித்து, சர்க்கரை பாகுவில் போடலாம்.
கடலைப் பருப்பு ஸ்வீட்
ஸ்வீட் என்றால் பிடிக்காதவர்களே இல்லை. அதிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் பருப்பை வைத்து செய்யும் ஸ்வீட்டின் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்காது. இப்போது அந்த பருப்பு வகையில் கடலைப்பருப்பை வைத்து எப்படி ஸ்வீட் செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 3 கப்
சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்
மைதா மாவு - 1 கப்
சோடா உப்பு - 1 சிட்டிகை
தேங்காய் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி பொடி - சிறிது
பாதாம் பொடி - சிறிது
உலர்ந்த திராட்சை - சிறிது
சர்க்கரை - 3 கப்
சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்
மைதா மாவு - 1 கப்
சோடா உப்பு - 1 சிட்டிகை
தேங்காய் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி பொடி - சிறிது
பாதாம் பொடி - சிறிது
உலர்ந்த திராட்சை - சிறிது
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை கால் மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதனை குக்கரில் வேக வைத்து, அதில் உள்ள நீரை வடித்து, நன்கு மசித்துக் கொள்ளவும். பின் மிக்ஸியில் அரை கப் சர்க்கரையை போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோவா, ஏலக்காய் தூள் போட்டு, கைகளில் நெய் மற்றும் சோடா உப்பை தடவிக் கொண்டு, இவற்றை நன்கு வடை போன்று தட்டிக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ளவற்றை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவுத் தண்ணீரை ஊற்றி, 2 1/2 கப் சர்க்கரையை போட்டு, கம்பிப் பதம் வரும் வரை நன்கு காய்ச்சி, அதில் பொரித்தவற்றை போட்டு எடுத்து, சர்க்கரைப் பொடி, முந்திரி பொடி, பாதாம் பொடி மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றில் போட்டு பிரட்டி எடுத்து, தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பின் அதன் மேல் உலர்ந்த திராட்சையை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
இப்போது சுவையான கடலைப் பருப்பு ஸ்வீட் ரெடி!!!
கோதுமை அப்பம்!
கோதுமை அப்பத்தை வீட்டில் ஈஸியாக எப்படி செய்வதென்று பார்ப்போமா!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
தேங்காய் பவுடர் - 3 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
சர்க்கரை - 3/4 கப்
தேங்காய் பவுடர் - 3 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் பவுடர், ஏலக்காய் தூள், சோடா பவுடர் மற்றும் தண்ணீர் ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான நெய்யை ஊற்றி, காய்ந்ததும், அதில் இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போட்டு, பொரிக்க வேண்டும்.
இப்போது கணபதிக்குப் பிடித்த கோதுமை அப்பம் ரெடி...
பூர்ண கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப் (வறுத்தது)
எள் - 2 கப்
வேர்க்கடலை - 2 கப்
பொட்டுக்கடலை - 2 கப்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மண்டை வெல்லம் - 100 கிராம்
உப்பு - சிறிது
எள் - 2 கப்
வேர்க்கடலை - 2 கப்
பொட்டுக்கடலை - 2 கப்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மண்டை வெல்லம் - 100 கிராம்
உப்பு - சிறிது
செய்முறை:
பூர்ணம் செய்ய...
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும். மண்டை வெல்லத்தை நன்கு நைஸாக இடித்து, அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் மண்டை வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
கொழுக்கட்டை செய்ய...
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, சிறிது லேசான அளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப்போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும்.
இப்போது பூர்ண கொழுக்கட்டை ரெடி!!!
No comments:
Post a Comment