அன்று...
தள்ளி வைத்தேன்
பள்ளி நாட்களை
இன்று...
அள்ளிக் கொண்டது
என்னை
எள்ளி நகையாடும்
ஏளன நாட்களும்
ஏழ்மை வாழ்க்கையும்!
பல உயிர்கள் காக்கப்படும்
காதல் செய்யும் முன்பும்தற்கொலை செய்யும் முன்புன்
சிறிது யோசனை செய்தால்
பல உயிர்கள்
காக்கப்படும்....
தவிர்க்க முடியவில்லை
அவள் கூட வருபவன் அவள்
அண்ணனாக இருக்க வேண்டும் என்று
மனது வேண்டிக்கொள்வதை
தவிர்க்க முடிவதில்லை
நீ இல்லாத வாழ்க்கையை
நடைப் பிணமாய் வாழ்கிறேன்
உன் நினைவுகள் - இன்னும்
உயிராய் ஓடிக்கொண்டிருப்பதால்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்கிறான்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
No comments:
Post a Comment