Tuesday, May 6, 2014

காலிஃப்ளவர் முட்டை டிப்

பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான காலிஃப்ளவரை வைத்து வறுவல், பஜ்ஜி, மஞ்சூரியன் போன்றவற்றை செய்திருப்போம். அதனை முட்டையுடன் சேர்த்து செய்திருக்கமாட்டோம். ஆனால் இப்போது காலிஃப்ளவரை, முட்டை மற்றும் சில மசாலாப் பொருட்களில் நனைத்து, எண்ணெயில் பொரித்து ஒரு வித்தியாசமான சுவையில் ஒரு ஸ்நாக்ஸை செய்யலாம். அதற்கு காலிஃப்ளவர் முட்டை டிப் என்று பெயர். இது மாலை வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

 
தேவையான பொருட்கள்: 
காலிஃப்ளவர் - 1 கப் 
முட்டை - 3 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் 
சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
முதலில் காலிஃப்ளவரை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை முட்டைக் கலவையில் நனைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான காலிஃப்ளவர் முட்டை டிப் ரெடி!!!
 

பச்சை பட்டாணி நிமோனா

வட இந்தியாவில் இருப்பவர்கள் தான் பச்சை பட்டாணி நிமோனாவை கேள்விப்பட்டிருக்க முடியும். மற்றபடி வேறு எவருக்கும் இதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ரெசிபி உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. பொதுவாக இதுவும் குழம்பு போன்றது தான். சாதத்துடன் சாப்பிட ஏற்ற ஒரு வித்தியாசமான குழம்பு தான் பட்டாணி நிமோனா. இந்த மாதிரியான வித்தியாசமான ரெசிபியை ஏதேனும் விழாக்களின் போது செய்தால், விழாவே ஒரு வித்தியாசமாக இருக்கும். அதிலும் அன்னையர் தினம் வரப் போகிறது. இத்தினத்தன்று அன்பான அம்மாவை அமர வைத்து, அவர்களுக்கு இந்த பச்சை பட்டாணி நிமோனாவை செய்து கொடுத்தால், நன்றாக இருக்கும். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்: 
பச்சை பட்டாணி - 3 கப் 
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
இஞ்சி - 1 இன்ச் 
பூண்டு - 4 பல் 
பச்சை மிளகாய் - 2-3 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
 மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
 
 
தாளிப்பதற்கு... 
சீரகம் - 1 டீஸ்பூன் 
மிளகு - 3-4 
பிரியாணி இலை - 2 
வரமிளகாய் - 2 
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது) 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
 
 செய்முறை: 
 முதலில் பச்சைப் பட்டாணியை ஓரளவாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்குகளை 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்கி, ஒரு தட்டில் தனியாக போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்த அனைத்துப் பொருட்களையும் போட்டு, 2-3 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து, 3 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து, 2 நிமிடம் கிளறி விட வேண்டும். இறுதியில் அரைத்து வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 3 நிமிடம் கொதிக்க விட்டு, வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 10 நிமிடம் ஆனதும், மூடியைத் திறந்து, கரம் மசாலா தூவி கிளறி விட்டு, இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பச்சை பட்டாணி நிமோனா ரெடி!!! இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சிறந்ததாக இருக்கும்.


சைவ சமையல்

மீல் மேக்கர் மசாலா

பொதுவாக மீல் மேக்கரை பிரியாணியில் சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த மீல் மேக்கரை மதிய வேளையில் சாதத்திற்கு, மசாலாவாக செய்து கூட சாப்பிடலாம். ஆம், இது சற்று வித்தியாசமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி. மேலும் அனைவருக்கும் பிடித்ததாகவும் இருக்கும். ஆகவே இன்று மதியம் ஏதாவது ஒரு வித்தியாசமான ரெசிபி செய்ய நினைப்போருக்கு இது சரியானதாக இருக்கும். அந்த மீல் மேக்கர் மசாலாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து, சுவை எப்படி இருந்தென்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்: 
மீல் மேக்கர் - 250 கிராம் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
 மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
தேங்காய் பால் - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
தண்ணீர் - 1 1/2 கப் (வெதுவெதுப்பானது) 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
 
செய்முறை: முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இப்போது மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். மசாலாவானது நன்கு கொதித்ததும், தீயை அணைத்துவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், அருமையான மீல் மேக்கர் மசாலா ரெடி!!!


காஷ்மீரி காராமணி மசாலா

 
காஷ்மீரி காராமணி மசாலா மிகவும் சுவையுடன் இருக்கக்கூடிய ஒரு மசாலா. பொதுவாக காராமணியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வெள்ளை காராமணி மற்றொன்று சிவப்பு காராமணி. இப்போது இந்த மசாலாவில் பயன்படுத்தியிருப்பது சிவப்பு காராமணி. பெரும்பாலும் காஷ்மீரி உணவுகள் காரத்தில் மிகவும் குறைவாக இருக்கும். ஏனெனில் காரம் அதிகம் இருந்தால், சுவை குறைந்துவிடும் என்பதாலேயே. மேலும் இதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல், சற்று வித்தியாசமான முறையில் மசாலா செய்யப் போகிறோம். சரி, இப்போது அந்த காஷ்மீரி காராமணி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் 
காஷ்மீரி காராமணி - 2 கப் (இரவு முழுவதும் ஊற வைத்தது) 
பிரியாணி இலை - 1 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
தக்காளி - 3 (நறுக்கியது) 
இஞ்சி - 1 இன்ச் (துருவியது) 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை: 
முதலில் ஊற வைத்துள்ள காராமணியை கழுவி, குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்னர் விசில் போனதும், தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் துருவிய இஞ்சி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின் வேக வைத்துள்ள காராமணியைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி விட்டு, இறுதியில் கரம் மசாலா சேர்த்து கிளறி, மீண்டும் 5-8 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான காஷ்மீரி காராமணி மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, பின் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
 
பச்சை மாங்காய் சாலட்
 
கோடைகாலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பார்த்ததும் வாயில் எச்சில் ஊற வைக்கும் மாங்காய் சீசனும் ஆரம்பித்துவிட்டது. மாங்காய்க்கு என்றே தனிப் பிரியர்கள் உள்ளனர். அவர்கள் மாங்காய் எவ்வளவு புளிப்புடன் இருந்தாலும், அந்த புளிப்பை பொருட்படுத்தாமல் சாப்பிடுவார்கள். அத்தகையவர்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ் சொல்லவா? மாங்காயை பச்சையாக கடித்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை சாலட் போன்று, செய்து மாலை வேளையில் சாப்பிட்டால், சிறந்ததாக இருக்கும். இப்போது அந்த மாங்காயை எப்படி சாலட் செய்வதென்று பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்: 
 
பச்சை மாங்காய் - 1 
பச்சை மிளகாய் - 1 
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) 
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் 
வெங்காயம் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 
சிட்டிகை உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
முதலில் மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த நறுக்கிய மாங்காயை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். பின்பு அதில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, இறுதியில் மேலே உப்பு தூவி பரிமாற வேண்டும். இப்போது சுவையான பச்சை மாங்காய் சாலட் ரெடி!!!


 
 

Wednesday, March 19, 2014

ரத்த குழாய் அடைப்பு நீங்க


நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை
செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்
உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்
ஆச்சரியம்.

தயவு செய்து கவனியுங்கள்.

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச்
செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு
பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள்
இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு
பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்
ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து
வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து
சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60
நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு
இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே
உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள்
நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !!! 
நன்றி.....